2020-ல் அமெரிக்கர்களின் சராசரி ஆயுட்காலம் 77 ஆண்டுகளாக குறைந்துள்ளதாக, தேசிய சுகாதார புள்ளியல் மையம் தகவல்
அமெரிக்காவில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 2-ம் உலகப்போருக்கு பிறகு தற்போது அதிக அளவில் சரிந்துள்ளது.
அந்நாட்டு நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2020-ம் ஆண்டில் சராசரி ஆயுட்காலம் 77 ஆண்டுகளாக குறைந்துள்ளது. இது 2019-ம் ஆண்டை விட ஒன்றே முக்கால் ஆண்டுகள் குறைவு என தேசிய சுகாதார புள்ளியல் மையம் வெளியிட்டுள்ள விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் இறப்புக்கான காரணங்களில் இதய நோய்கள், புற்றுநோய் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக கொரோனா 3வது இடத்தை பிடித்துள்ளது.
Comments