பெண்ணிடம் வழக்கறிஞர் அநாகரீகமாக நடந்துகொண்ட விவகாரம்... "பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என யோசித்தேன்" - நீதிபதி பி.என்.பிரகாஷ் வேதனை
காணொலி வழக்கு விசாரணையின் போது, பெண்ணிடம் வழக்கறிஞர் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட செயலால் தனது பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என நினைத்ததாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், சந்தானகிருஷ்ணன் வழக்கறிஞர் தொழில் செய்ய பார் கவுன்சில் தடை விதித்தது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக வேறொரு வழக்கில் இதுகுறித்து குறிப்பிட்ட நீதிபதி பி.என்.பிரகாஷ், இச்சம்பவம் மிகப்பெரிய அசிங்கம் என்றும், தனது பதவியை ராஜினாமா செய்துவிடலாமா என யோசித்ததாகவும் வேதனை தெரிவித்தார்.
Comments