இந்தியாவில் தகுதியுடைய 60 சதவீத பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடைய 60 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் பங்கேற்பு மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியால் 60% பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 139 கோடியை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,495 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது.
Comments