செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து ஓட்டுநருக்கு அடி உதை - போதை ஆசாமி கைது

0 4621

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தும் பேருந்து ஓட்டுனரை தாக்கியும் ரகளையில் ஈடுபட்டவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவள்ளூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கிராசிங்கில் இருந்து பேருந்து கிளம்பிய போது பைக்கில் வந்த தெள்ளிமேடு பகுதியை சேர்ந்த விஜயக்குமார் என்பவன் சாலையிலேயே பைக்கை நிறுத்தி தனது நண்பருடன் பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பேருந்து ஓட்டுனருக்கும் மது போதையில் இருந்ததாக கூறப்படும் விஜயக்குமாருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் ஓட்டுனர் புருஷோத்தமனை தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments