"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ரயில்வே துறைக்குக் கடந்த ஓராண்டில் ரூ. 26,388 கோடி இழப்பு.. தலைமைக் கணக்குத் தணிக்கையரின் அறிக்கையில் தகவல்.!
ரயில்வே துறைக்குக் கடந்த ஓராண்டில் 26 ஆயிரத்து 388 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தலைமைக் கணக்குத் தணிக்கையரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுடன், கட்டணத்தை உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளது.
ரயில்வே துறை இலாபத்தில் இயங்குவதாக மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில் செவ்வாயன்று தலைமைக் கணக்குத் தணிக்கையரின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கடந்த ஓராண்டாக ரயில்வே துறைக்கு 26 ஆயிரத்து 388 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இழப்பைத் தவிர்த்து வருவாயை அதிகரிக்கக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில் ரயில்வே அமைச்சகம் ஆயிரத்து 589 கோடி ரூபாய் உபரி நிதி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
Comments