"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பிலிப்பைன்ஸில் ராய் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா உதவி
பிலிப்பைன்ஸில் ராய் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சீனா சுமார் 7 கோடியே 54 லட்சம் ரூபாய் நிதியும், 4 ஆயிரத்து 725 டன் அரிசியையும் வழங்கியுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் சீனா உதவியிருப்பதாக கூறி பிலிப்பைன்ஸ் தேசிய வள மற்றும் சரக்கு மேலாண்மை அமைப்பின் இயக்குநர் இம்மானுவேல் ப்ரிவாடோ அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
பிலிப்பைன்சை சூறையாடிய ராய் புயலால் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நிவாரண பணிகளை விரைவுப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் நேற்றிரவு பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments