கொடைக்கானலில் தரை முழுவதும் வெள்ளை கம்பளம் விரித்தது போல் உறைபனி...!
கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு காரணமாக, பல்வேறு இடங்களில் தரை முழுவதும் வெள்ளை கம்பளம் விரித்தது போல் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.
கொடைக்கானலில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை, கடும் உறைபனி பொழிவு இருக்கும். கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரை நிலவுகிறது. இந்நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும், இன்று அதிகாலை 8 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக வெப்பநிலை நிலவியதால், புற்களின் மேல் விழுந்த நீர்ப் பனித்துளிகள் உறைந்து உறைபனியாக மாறியது.
நீர்பிடிப்பு பகுதிகளான கீழ்பூமி, பாம்பார்புரம், பிரையண்ட் பார்க் உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில், இவ்வாறு உறைபனி அதிகளவில் காணப்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் காலை வேளையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர். இதனிடையே, பனியானது ஏரியில் ஆவியாக செல்லும் காட்சியை பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
Comments