ஆஸ்கர் தேர்வு பட்டியலில் இருந்து வெளியேறியது நயன்தாரா- விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான 'கூழாங்கல்' திரைப்படம்

0 5415

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான 'கூழாங்கல்' திரைப்படம் ஆஸ்கர் தேர்வில் இருந்து வெளியேறியது.

அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படுவதாக தேர்வுகுழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான தேர்வு பட்டியலில் 'கூழாங்கல்' இடம்பெறாததால் ஆஸ்கர் தேர்வில் இருந்து வெளியேறியது.

இதனிடையே, சிறந்த ஆவணப் படத்துக்கான தேர்வு பட்டியலில் இந்தியா சார்பில் ரிண்டு தாமஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள Writing with Fire என்ற படம் தேர்வாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments