ரபேல் போர் விமானத்துக்கு ஏவுகணைகளை வழங்குவதில் தாமதம் எதிரொலி... பிரான்ஸ் நிறுவனத்துக்கு அபராதம்
ரபேல் போர் விமானங்களுக்கான ஏவுகணைகளை டெலிவரி செய்ய தாமதம் செய்ததாக பிரான்சின் எம்.பி.டி.ஏ. நிறுவனத்திடம் இருந்து 10 லட்சம் யுரோ பணத்தை அபராதமாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வசூலித்தது.
ரபேல் விமானங்களுக்கான ஏவுகணைகளை தயாரித்து வழங்க பிரான்சின் எம்.பி.டி.ஏ. நிறுவனத்திடம் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தத்தின்படி 2020 -21 செப்டம்பர் காலக்கட்டத்தில் தரவேண்டிய ஏவுகணைகளை எம்.பி.டி.ஏ. நிறுவனம் தாமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நிறுவனத்திடம் இருந்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 10 லட்சம் யூரோ பணம் வரை அபராதமாக வசூலித்தது.
Comments