நாட்டில் முதல் முறையாக வி.ஐ.பி., ஜெட்+ பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எப். வீராங்கனைகளை ஈடுபடுத்த முடிவு
நாட்டில் முதல் முறையாக பெண் சி.ஆர்.பி.எப். வீராங்கனைகளை ஜெட் பிளஸ் மற்றும் வி.ஐ.பி. பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் பணியமர்த்தப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக மத்திய உள்துறை அமித் ஷா, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 32 வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தலைவர்களின் வீடுகள் மற்றும் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு உடன் சென்று பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும், ஜனவரி மாதம் 2-வது வாரம் முதல் பெண் சி.ஆர்.பி.எப். வீராங்கனைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments