ஃபைசர் நிறுவனத்தின் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு அனுமதி - அமெரிக்க மருத்துவ நிபுணர்கள்
பைசர் நிறுவனத்தின் கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைகளுக்கு அமெரிக்கா உள்நாட்டு கோவிட் சிகிச்சைக்குப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் கோவிட் நோய்க்கு சிகிச்சையளிக்கும் முதல் மாத்திரையாக பைசர் நிறுவனத்தின் Paxlovid, மாத்திரைக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.
வைரஸ் பாதிப்புக்கு ஆளான அமெரிக்கர்கள் இதனை வீட்டுக்கு கொண்டு போய் சிகிச்சை பெறலாம் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.மிகக் குறைந்த எதிர்வினைகளும் வேகமான குணப்படுத்தும் ஆற்றலும் இந்த மாத்திரைக்கு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Comments