கொப்பரைத் தேங்காய்க்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்
கொப்பரைத் தேங்காய்க்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ஒரு குவிண்டாலுக்கு 11 ஆயிரம் ரூபாய் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், 2022ஆம் ஆண்டு சராசரித் தரமான அரைவைக் கொப்பரைத் தேங்காய்க்கு குவிண்டாலுக்கு 10 ஆயிரத்து 590 ரூபாய் எனவும், உடைக்காத கொப்பரைத் தேங்காய்க்கு 11 ஆயிரம் ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அரைவைக் கொப்பரைத் தேங்காய்க்கு உற்பத்திச் செலவை விட 52 விழுக்காடும், உடைக்காத கொப்பரைத் தேங்காய்க்கு 58 விழுக்காடும் அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Comments