வேலைக்கு கூலி... பெண்ணை அடித்து விரட்டிய முதலாளி... தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர்
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், கருவலூரை சேர்ந்த கார்த்திக் -கீதா தம்பதியினர் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஜாப் ஆர்டர் எடுத்து வேலை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருமுருகன்பூண்டி - அண்ணா நகரில், பனியன் நிறுவனம் நடத்தி வரும் சித்தையன்,அவரது மகன் பிரதீப் ஆகியோரிடம் இந்த தம்பதியினர் ஜாப் ஆர்டர் எடுத்து செய்து வந்தனர்.
இந்நிலையில் செய்த வேலைக்கான நிலுவைத் தொகையை கேட்க கணவன்-மனைவி இருவரும் பனியன் உரிமையாளர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் எழுந்த நிலையில் முதலில் கீதா, சித்தையனின் மனைவியை தாக்கியதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த சித்தையன் , கீதாவை ஓங்கி அறைந்ததால் அங்கு பரபரப்பு உருவானது.
கீதாவும், சித்தையனின் மகன் பிரதீப்பும் ஒருவரையொருவர் கடுமையாக வாக்குவாதம் செய்து கொண்டு வீதியில் நின்று சண்டையிட்டனர்
இவ்வளவு களேபரங்களுக்கும் இடையே அங்கிருந்த கீதாவின் கணவர் கார்த்திக், மனைவியை தாக்கியவர்களைத் தடுக்காமல், இந்த தாக்குதல் சம்பவங்களை எல்லாம் பொறுமையாக வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தார்
இரு தரப்பும் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதில் தங்களை சாதியை சொல்லி திட்டியதாக கீதா தரப்பில் புகார் அளித்துள்ள நிலையில், அது தொடர்பான ஆதாரம் வீடியோ காட்சியில் இல்லாததால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செல்போனுடன் கேமரா வந்தாலும் வந்தது, சின்ன சம்பவங்களை கூட படமாக்கி பெரிய விவகாரமாக்கி விடுவதாக போலீசார் தெரிவித்த நிலையில் கீதாவுக்கு ஆதரவாக தென்மாவட்ட அரசியல் பிரமுகர் ஒருவர் நேரடியாக களமிறங்கி உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
Comments