நகர பேருந்தை மறித்து அரசு பள்ளி மாணவர்கள் ரகளை: நோட்டு புத்தகங்களை பேருந்து மேற்கூரையில் வீசி அட்டூழியம்

0 2372

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், அரசு பேருந்தின் மேற்கூரையில் பள்ளி மாணவர்கள் நோட்டு புத்தகங்களை வீசி ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மானாமதுரை பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்து ஒன்று புறப்பட தயாராக இருந்த நிலையில், இரண்டு மாணவர்கள் திடீரென பேருந்தை மறித்தனர். தங்களது நோட்டு புத்தகங்களை மேலே வீசிவிட்டதாகவும், அதனை எடுக்க வேண்டும் எனவும் கூறி பேருந்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்த நபர், மாணவர்களை கண்டித்ததை அடுத்து அவர்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments