ஹரியானாவில் குருகிராம் மாவட்டத்தில் தகுதியுடைய 18.03 லட்சம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை

0 2326

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் மாவட்டத்தில் தகுதியுடையோர் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் வந்து செல்லும் குருகிராம் மாவட்டம் கொரோனா இரண்டாம் அலையின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்திய சுகாதாரத்துறையினர் அங்கு தடுப்பூசி செலுத்த தகுதியான 18 லட்சத்து மூன்றாயிரத்து 656 பேருக்கும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி முடித்தனர்.

இதையடுத்து டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டமாக குருகிராம் திகழ்கிறது. இதற்கு முன் ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னெளர், சத்தீஸ்கரின் ரைகர்ஹ் மாவட்டங்களில் 100 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments