ஆம் ஆத்மி அரசு நியாயவிலைக் கடைகளைத் திறக்கவில்லை, புதிய மதுக்கடைகளைத் திறந்துள்ளது - டெல்லி அரசு மீது மீனாட்சி லேகி குற்றச்சாட்டு
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு புதிய நியாயவிலைக் கடைகளைத் திறக்கவில்லை என்றும், புதிய மதுக்கடைகளைத் திறந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லியில் அரசின் மதுக் கொள்கைக்கு எதிரான பாஜக கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்ட மீனாட்சி லேகி, கேஜ்ரிவால் அரசு புதிய குடும்ப அட்டைகளை வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அதேநேரத்தில் நகரம் முழுவதும் புதிய மதுக்கடைகளைத் திறந்துள்ளதால், மதுபோதைக்கு அடிமையானவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நகரில் புதிதாக 850 மதுக்கடைகளைத் திறக்க டெல்லி அரசு எடுத்துள்ள முடிவால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments