இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை.. அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது

0 2302

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கதிர்நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த அருள்குமரன் கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த சுமதி என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்ட நிலையில், சுமதி தனது 27 வயது மகளுடன் அருள்குமார் வீட்டில் அடிக்கடி தங்கியுள்ளார்.

இந்நிலையில், சுமதியின் மகள் கழிவறை செல்லும் போது அருள்குமார் அதனை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி, இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்தது போல போட்டோ எடிட் செய்த அருள்குமார், தனக்கே திருமணம் செய்து வைக்குமாறு சுமதியை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து சுமதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார், அருள்குமாரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments