குடிபோதையில் அங்கன்வாடி பணிக்கு வந்து, வாசலிலேயே மயங்கி சரிந்த பெண் சமையலர்

0 8020

கும்பகோணத்தில் அங்கன்வாடி பெண் சமையல் ஊழியர் ஒருவர், குடிபோதையின் உச்சத்தில் வந்து அங்கன்வாடி வாசலிலேயே மயங்கி சரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

அரியதிடல் கிராமத்தில் உள்ள அந்த அங்கன்வாடி மையத்தில் மீனாட்சி என்ற பெண் சமையலராகப் பணியாற்றி வருகிறார். குடிப்பழக்கத்தில் அடிமையானவராக கூறப்படும் மீனாட்சி, கடந்த மாதம் போதையிலேயே பணிக்குச் சென்றதாகவும் அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பினர் என்றும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் வேலைக்கே வராத மீனாட்சி, புதன்கிழமை காலை மீண்டும் முழு போதையில் அங்கன்வாடிக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தன்னை மறந்து தள்ளாடியபடி வந்தவர் வாசலிலேயே உட்கார்ந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

அங்கிருந்த ஆசிரியைகள் அவரை கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளனர். ஆனால், எதையும் கேட்கும் நிலையில் இல்லாத மீனாட்சி, சிறிது நேரத்தில் அப்படியே மயங்கிச் சரிந்தார்.

இந்த வீடியோ தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குச் சென்ற நிலையில், மீனாட்சி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments