ஒமைக்ரான் அச்சம் : டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்குத் தடை

0 2576

மைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், அனைத்து விதமான அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வணிக வளாகங்கள், பணியிடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 57 பேருக்கு புதிய வகை வைரசின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments