வங்கி ஊழியரின் பணப்பையை திருடி சென்ற நபர், திறந்து பார்த்ததும் காத்திருந்த அதிர்ச்சி

0 4328

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், வங்கியில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் பணப்பை என நினைத்து ஊழியரின் உணவு பையை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பள்ளிபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக்குள் நோட்டமிட்டபடி வந்த மர்ம நபர் ஒருவர், வங்கியின் காசாளர் அறை திறந்திருப்பதை பார்த்ததும் திடீரென உள்ளே சென்று, அங்கிருந்த ஒரு பையை எடுத்து தான் கொண்டுவந்த பைக்குள் போட்டார்.

சிறிது நேரத்தில் அங்கு காசாளர் வந்த நிலையில், சுதாரித்துக்கொண்ட அந்த மர்ம நபர் தெரியாமல் உள்ளே வந்தது போல் பாவனை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.

காசாளர் மதிய உணவிற்காக பையை தேடிய போது கிடைக்காததால், சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்ததில், அந்த மர்ம நபர் பணப்பை என நினைத்து அந்த உணவு பையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இருப்பினும், திருட்டு முயற்சி சம்பவம் குறித்து, பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments