மயானத்தில் சண்முகநாதனின் உடலைப் பார்த்து துயரம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்ட முதலமைச்சர்

0 3316

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

சுமார் 50 ஆண்டுகாலம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராகப் பணியாற்றி வந்த சண்முகநாதன், உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்கிழமை உயிரிழந்தார். 

தேனாம்பேட்டையிலுள்ள சண்முகநாதனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், மயிலாப்பூர் மின்மயானம் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அரை மணி நேரத்துக்கு முன்பே அமைச்சர்கள் பலருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காத்திருந்தார்.

சண்முகநாதன் உடல் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு ஏரியூட்டுவதற்காக  மின் தகன மேடையில் வைக்கப்பட்ட போது, அதனை பார்த்து மு.க ஸ்டாலின் துயரம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். உடனிருந்த அமைச்சர்கள் அவரைத் தேற்றினர். 

இறுதிச் சடங்குகள் முடிந்தபின் சண்முகநாதனின் உடலுக்கு அவரது வாரிசுகள் எரியூட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments