கொடநாடு வழக்குத் தொடர்பாக சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை

0 3013

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.  2017 ஆம் ஆண்டு ஏப்ரல் கோடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளை சமபவம் நடைபெற்றது.

இவ்வழக்கில் ஏற்கனவே கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரான கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகிய இருவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

ரமேஷின் ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் எஸ்டேட் மேலாளரிடம் மூன்று முறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், முதல் முறையாக விவேக் ஜெயராமனிடம் கோவையிலுள்ள ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஓரிரு நாளில் மீண்டும் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments