ரிலையன்ஸ், டாட்டா, பதஞ்சலி உள்ளிட்ட 11 தனியார் நிறுவனங்களுக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை காவல்

0 4929

ரிலையன்ஸ், டாட்டா, இன்போசிஸ், பதஞ்சலி, பாரத் பயோடெக் உள்ளிட்ட 11 தனியார் நிறுவனங்களுக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அளிக்கப்படுவதாக, நாடாளுமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்து மூலம் அளித்த பதிலில், நிறுவனங்களுக்கு உள்ள அச்சுறுத்தல், வீரர்களைக் காவலுக்கு நிறுத்தும் செலவை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை தனியார் இணைந்து நடத்துவன உட்பட 64 விமான நிலையங்களில் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments