2 டோஸ்களையும் செலுத்தி 3 மாதங்கள் ஆன பிறகு ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் வீரியம் குறையும் - லான்செட் இதழில் அதிர்ச்சித் தகவல்
ஆஸ்ட்ராஜெனிகா (AstraZeneca) தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தி 3 மாதங்கள் ஆன பிறகு அதன் வீரியம் குறைவதாக பிரபல லான்செட் மருத்துவ இதழில அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்காட்லாந்தில் 20 லட்சம் பேரிடமும், பிரேசிலில் 4 கோடியே 20 லட்சம் பேரிடமும் அந்நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டதில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.
2-வது டோஸ் செலுத்திக்கொண்ட பிறகு 2 வாரங்கள் கழித்து அந்த தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் 2 மடங்காக உயர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 5 மாதங்களுக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் 5 மடங்காக உயர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments