மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

0 2675

இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு செல்லும் மலை ரயில் போக்குவரத்து அவ்வப்போது ரத்து செய்யப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 180 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில், குன்னூர் ரயில் நிலையத்துக்கு வந்தது.

கனமழை காரணமாக கல்லார், ஹில்குரோவ், ஆடர்லி உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததால் ரயில்பாதை சேதமடைந்தது. இந்நிலையில், சேதமடைந்த தண்டவாளம் சீர் செய்யப்பட்டதை அடுத்து, மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments