மாணவ, மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் ; அறிக்கை கேட்டு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ்
திருப்பூரில் உள்ள இடுவாய் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவ, மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் குறித்து அறிக்கை கேட்டு மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் எஸ்.பி.,சசாங் சாய்-க்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தலைமை ஆசிரியை கீதா, மாணவிகளை சாதியின் பெயரைச் சொல்லி தரக்குறைவாக திட்டியதோடு கழிவறையையும் சுத்தம் செய்ய வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
Comments