மதுரையில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிவாரணம்

0 3064

மதுரையில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணன் குடும்பத்துக்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரணமும், அவர் மனைவிக்கு அரசுப் பணியும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மதுரை கீழவெளி வீதியில் பாழடைந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தலைமைக் காவலர் கண்ணன் காயமடைந்தார்.

இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமைக் காவலர் கண்ணனுக்கு 5 இலட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments