இந்தியா சார்பில் 94 நாடுகள், ஐ.நாவுக்கு 9.93 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
இந்தியா சார்பில் 94 நாடுகள், ஐ.நா.வின் இரு அமைப்புகளுக்கு கடந்த 15ஆம் தேதி வரை 9கோடியே 93 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மானியமாக, வணிக ஏற்றுமதியாக அல்லது ஐ.நா.வின் கோவேக்ஸ் திட்டம் மூலமாக இந்தத் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டன என்றார்.
கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அதுதொடர்பான மருத்துவ மற்றும் பிற உதவிகளை 150 நாடுகளுக்கு இந்தியா அளித்துள்ளது என்றார்.
Comments