இணையவழி குற்றங்களை தடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் அமித் ஷா

0 2256

இணையவழி குற்றங்களை தடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இணையவழி குற்றங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இணையவழி குற்றங்களுக்கு எதிரான மென்பொருள்களை தயாரிக்கும் பணி 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார்.

அந்தக் குற்றங்களைத் தடுப்பதற்கு காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments