மேற்கு வங்கத்தில் இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து

0 2304

மேற்கு வங்கம் புர்பா மெதினாபுர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்தும் வெடி விபத்தும் ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

42 பேர்  மருத்துவமனையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் 37 பேர் கொல்கத்தாவின் தேசுன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதில் 7 பேரின்  நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையாகப் பரவிய தீ பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீவிபத்துக்கான காரணம் விளங்கவில்லை . தீப்பொறி காரணமாக பெரும் வெடிப்பு ஏற்பட்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மாதங்களாக பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டிருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments