கோவிட் பேரிடருக்குப் பின் மீண்ட விமானப் போக்குவரத்து ஒமிக்ரான் பீதியால் மீண்டும் பாதிப்பு
கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த விமானப் போக்குவரத்து மீண்டும் ஒமிக்ரான் பீதியால் பின்னடைவை சந்தித்துள்ளது.
கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக கோவிட் பாதிப்புகளளால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியதால் சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. படிப்படியாக மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தியதால் வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் மீண்டும் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் காரணமாக விமான நிலையங்களில் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இதனால் சற்று தலைதூக்கிய விமானப் போக்குவரத்தும் சுற்றுலாத் துறையும் மீண்டும் தொய்வு அடைந்துள்ளன. சுற்றுலா செல்வோரும் தங்கள் பயணங்களை ஒத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Comments