டாலர்களுக்கு ஆசைப்பட்டு தீவிரவாதிகளை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுத்தது தவறு - இம்ரான் கான்
அமெரிக்க டாலர்களுக்கு ஆசைப்பட்டு தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறான முடிவு என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாக தீவிரவாதத்துக்கு ஆதரவாக ஒரு நாட்டின் பிரதமர் பேசுவது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. 2001ல் முஷாரப் அதிபராக இருந்தபோது, அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் பாகிஸ்தானை இணைத்தது மக்களுக்கு எதிரான முடிவு என்கிறார் இம்ரான் கான்.
சுமார் 20 ஆண்டுகாலம் பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப் போரில் பங்கெடுத்தது. ஆப்கானுக்கு எதிரான யுத்தம் போன்றவற்றில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இது பணத்துக்காக நாட்டின் பெருமையை சீர்குலைத்து விட்ட செயல் என்று இம்ரான் கான் கூறியுள்ளார்
Comments