சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 26 ஆம் தேதி மண்டல பூஜை

0 2330

மண்டல பூஜைக்காக அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியின் ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று சபரிமலைக்கு புறப்படுகிறது.

 ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து  பல்லக்கில் புறப்படும் தங்க அங்கிக்கு போலீஸ் சார்பில் துப்பாக்கி ஏந்திய வரவேற்பு அளிக்கப்படுகிறது. வருகிற 25 ஆம் தேதி சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கி அன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெறும். 

26-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் நடைபெறும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments