உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்

0 2655

சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்ததால் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக கல்லாறு- அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரெயில் பாதையில் விழுந்தன. தண்டவாளங்கள் சேதமடைந்ததால், மலை ரெயில் சேவை கடந்த ஒரு மாதமாகவே நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது சீரமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவு பெற்றுள்ளது. இதையடுத்து மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments