டெல்டா வகையை விட ஒமைக்ரான் தொற்று 3 மடங்கு வேகமாக பரவும் திறன் கொண்டது - மத்திய அரசு எச்சரிக்கை
டெல்டா வகை கொரோனா வைரசை விட ஒமைக்ரான் வகை தொற்று 3 மடங்கு வேகமாக பரவும் திறன் கொண்டுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில், நோய்ப் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவை கட்டுப்படுப்படுத்த தேவைப்பட்டால் மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கவும், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளின் கையிருப்பை கண்காணிக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
Comments