பெண்களின் நலனிற்காக திருமண வயதை உயர்த்த முயற்சி - பிரதமர் மோடி
பெண்களின் திருமண வயதை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதன் மூலம் கல்வி கற்பது இடைநிற்றலின்றி தொடர்வதுடன், லட்சியங்களையும் அவர்கள் எட்டுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தின் பிரயக்ராஜில் 2 லட்சம் பெண்கள் கலந்துகொண்ட நலத்திட்ட விழாவில் பங்கேற்ற பிரதமர், மகளிருக்கு 1000 கோடி ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக்குழுக்களின் வங்கி கணக்கிற்கே பணத்தை செலுத்தும் இந்த திட்டத்தால் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒரு காலத்தில் பெண்களின் பெயரில் சொத்துக்களும், அவர்கள் நலத்திட்டங்களை பெற வங்கிக் கணக்கும் இல்லை என்றும் தற்போது அந்நிலை மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மகளிரின் நலனிற்காக கொண்டு வரும் திட்டங்களை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்
Comments