தொங்குடா தொங்கு.. பட்டத்துடன் பறந்த பேமிலி பேட்மேன்.. கைதட்டி ரசித்த 2k லிட்டில் பிரின்சஸ்.!

0 5226

நண்பர்களுடன் சேர்ந்து ராட்சத அளவிலான பட்டத்தை பறக்க விட்ட இளைஞர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விட மறந்ததால் கயிற்றுடன் ஆகாயத்தில் பறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  கவுண்டமணி பட காமெடி போல  நடந்த  நகைச்சுவை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

நினைவுச்சின்னம் படத்தில் இடம் பெற்ற காமெடிக்காட்சியில் ராட்சத பலூனில் இணைத்திருக்கும் கயிற்றை கெட்டியாக பிடித்திருக்கும் செந்திலை, கயிற்றோடு சேர்த்து வானில் பறக்கவிட்டு இந்த பக்கம் போனால் பஞ்சாப்பு... அந்தப்பக்கம் போனால் சிலோனு... என்று கவுண்டமணி அடிக்கும் காமெடி காட்சியை மிஞ்சும் வகையில் சம்பவம் ஒன்று யாழ்பாணத்தில் அரங்கேறி உள்ளது.

யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி கம்பாவத்தை கிராமத்தில் இளைஞர்கள் பலர் சேர்ந்து, 13 அடி உயரம் கொண்ட பெரிய அளவிலான பட்டம் செய்து அதனை பறக்கவிட ஆயுத்தமாகி கொண்டிருந்தனர். பல இளைஞர்கள் சேர்ந்து கயிற்றை பிடித்துக் கொண்டு பட்டத்தை வானில் ஏற்றிக் கொண்டிருந்த வேளை பட்டம் வேகமாக பறக்க ஆரம்பித்தது.

அப்போது முன் வரிசையில் இருந்த இளைஞர் பட்டத்தின் கயிற்றை விடுவதற்குள் அவருக்கு பின்னால் நின்ற இளைஞர்கள் கயிற்றை விட்டு விட்டனர். அடுத்த நொடி காற்றின் வேகத்துக்கு ஜெட்டாக வானை நோக்கி பறந்த பட்டத்தோடு அந்த முன்வரிசை இளைஞரும் தூக்கிச்செல்லப்பட்டார்

முன்னதாக இளைஞர்கள் பட்டம் ஏற்றும்போது அதன் கயிற்றை ஒருமரத்தில் கட்டிவிட்டே பட்டம் ஏற்றியிருக்கிறார்கள், இதனால் பட்டத்தை ஏற்றிய இளைஞர்கள் அனைவரும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப்போயினர்

பட்டத்தின் கயிற்றை விடாமல் கெட்டியாக பிடித்திருந்த நிலையில் சுமார் நாற்பது அடி உயரத்தில், யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா ? என்ற எதிர்பார்ப்பில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொங்கிக்கொண்டிருந்தார் அந்த இளைஞர்

ஹீரோயினை காப்பாற்ற செல்லும் ஹீரோ போல பட்டத்தின் கயிற்றில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரை மீட்க இயலாமல் அனைவரும் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்தனர். இதையடுத்து தன் கையே தனக்கு உதவி என்று சமயோசிதமாக யோசித்த அந்த பட்டக் கயிறு ஜேம்ஸ் பாண்டு கயிற்றின் பின் நகர்ந்து வர ஆரம்பித்தார்

மெல்ல மெல்ல கயிற்றில் தொங்கியபடியே நகர்ந்து, வந்த அந்த இளஞர் சுமார் இருபது அடி உயரம் வரை வந்தார், அதற்கு மேல் நகர இயலாத நிலையில் தனது கையை விட்ட நிலையில் தோட்டச் செய்கைக்காக பண்படுத்தப்பட்ட நிலத்தில் விழுந்ததால் உயிர் தப்பினார்

விழுந்த வேகத்தில் உடலில் ஏற்பட்ட உட் காயங்களுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். உடனடி சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே அந்தரத்தில் பட்டத்தின் கயிற்றை பிடித்துக் கொண்டு அந்த பேட்மேன் தொங்கிக் கொண்டிருந்த போது, 2 கே லிட்டில் பிரின்சஸ் ஆன அவரது மகள், தந்தை கயிற்றில் தொங்கிய நிலையில் பறப்பதை கண்டு ஆபத்தை உணராமல் ஆச்சரியத்தில் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிட தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments