நாடு முழுவதும் "ஓப்போ" செல்போன் உற்பத்தி நிறுவனங்களில் வருமான வரி சோதனை.!

0 5128

சென்னை உட்பட நாடு முழுவதுமுள்ள ஓப்போ உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களிலும் அவற்றுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரில், தமிழ்நாட்டில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உட்பட 30 இடங்களில் உள்ள செல்போன் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில்  இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனை முழுமையாக முடிந்த பின்னரே வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments