பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் - சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள் பதிவு

0 2617

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே 5 போக்சோ வழக்குகளும் 2 பெண் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் மேலும் 3 முன்னாள் மாணவிகள் அளித்த புகார்களின் பேரில் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து அவர் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 9 மற்றும் 10 வது வழக்குகளில் சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.

வழக்கினை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை அடுத்த மாதம் 4- ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments