முதலமைச்சரை சாட்டை துரைமுருகன் விமர்சித்த விவகாரம்.. ஜனவரி 5-ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி.!

0 3102

சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்க்கும் அரசின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு, வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யூ டியூபில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில், சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில் சாட்டை துரைமுருகன் பேசிய விபரங்கள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, சாட்டை துரைமுருகன் பேசிய முதல் வார்த்தையை படிக்கவே கூச்சமாக இருக்கிறது என குறிப்பிட்டார்.

மேலும், கருத்து சுதந்திரம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கை தீர்ப்புக்காக ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments