இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதாக, 20 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை
தேசத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதால் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம், பாகிஸ்தானில் இருந்து கொண்டு பொய்யான கருத்துக்களை பதிவிட்டதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் உதவியுடன் செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பதிவிடப்படும் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
Comments