முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக 48 ஆண்டுகாலம் பணியாற்றிய சண்முகநாதன் காலமானார், அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது.
தமிழ் சுருக்கெழுத்து பணியாளராக காவல்துறையில் சண்முகநாதன் பணியாற்றிய நிலையில், கலைஞரின் நேர்முக உதவியாளராக பொறுப்பேற்றார். இதனை அடுத்து, கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் அவரது உதவியாளராகவே அவர் தொடர்ந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் சண்முகநாதன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் சண்முகநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Comments