தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படத்தை அகற்ற கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு, ரூ.1 லட்சம் அபராதம் விதித்த கேரள உயர் நீதிமன்றம்

0 3261

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்ற கோரி வழக்கு தொடுத்தவருக்கு கேரள உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படத்தை அகற்ற உத்தரவிட கோரி சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடுத்தார்.

அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் புகைப்படம் இருப்பதில் தவறில்லை எனத் தெரிவித்த நீதிபதி குன்ஹிகிருஷ்ணன், வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

இது விளம்பரம் தேடும் நோக்கில் தொடுக்கப்பட்ட வழக்கு என விமர்சித்த நீதிபதி மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

வெளிநாடுகளில், தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இல்லாதது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, வெளிநாட்டினர் அவர்களது பிரதமரை நினைத்து பெருமை படாவிட்டாலும், நாம் நம் பிரதமரை நினைத்து பெருமை பட வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments