ஜப்பானில் 2 ஆண்டுகளுக்கு பிறகு3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு தனது உறவினர்கள் 7 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக யசுடகா புஜிஷிரோ என்னும் 65 வயதான நபரும், கடந்த 2003ஆம் ஆண்டு ஆர்கேட் கேம் பார்லரில் இரண்டு குமாஸ்தாக்களைக் கொன்ற 54 வயதான டோமோகி தகனேசாவாமற்றும் அவரது கூட்டாளி மிட்சுனோரி ஒனோகாவாஆகிய இருவரும் தூக்கிலிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்றப் பிறகு வழங்கப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும்.
Comments