ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை ; போலீசார் விசாரணை

0 4179
ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை ; போலீசார் விசாரணை

சென்னையில் ஆயுதப்படை காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த 26 வயதுடைய ஆயுதப்படை காவலர் சாதிக் பாஷா, சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவில் அவரது சக காவலர் நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், அவரது நண்பர்கள் நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது , சாதிக் பாஷா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாதிக் பாஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதனிடையே, தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை என சாதிக் பாஷா கடிதம் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments