'இல்லம் தேடி கல்வி' திட்ட டி-ஷர்ட் அணிந்தபடி டாஸ்மாக் கடைக்கு வந்த நபரால் சர்ச்சை
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், இல்லம் தேடி கல்வி திட்ட டி-ஷர்ட் அணிந்த நபர் வரிசையில் நின்று மது வாங்கிய வீடியோவால் சர்ச்சை எழுந்ததை அடுத்து அவர் தொடர்புடைய பிரச்சார குழு நீக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடையில் மது வாங்கிய அந்த நபர் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து பிரச்சார ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வண்டியில் ஏறிச் செல்வதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தலங்களில் பதிவிட்டார்.
அந்த வீடியோ வைரலாகி சர்ச்சைக்கு உள்ளான நிலையில், நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டதால் , மது வாங்கிய நபருக்கு சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சார குழு முழுமையாக நீக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.
Comments