மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக் ஷியின் சொத்துக்களை விற்று 13,100 கோடி கடன் மீட்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வங்கிக்கடன் மோசடி வழக்கில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக் ஷி ஆகியோரின் சொத்துக்கள் மூலம் 13ஆயிரத்து 100கோடி ரூபாய் கடன் மீட்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், கடைசியாக ஜூலை மாதம் 16-ந் தேதி விஜய் மல்லையா உள்ளிட்டோருக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்து 792கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் இணைந்து சுமார் 5லட்சத்து49ஆயிரம் கோடி கடன்கள் வசூலித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், கடன் வாங்கிவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடியவர்களிடம் இருந்து பணத்தை வசூலித்து பொதுத்துறை வங்கிகளில் சேர்த்துள்ளதாகவும் கூறினார்.
Comments