மடகாஸ்கர் தீவில் சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி

0 3551

கிழக்கு ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 17பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே Antanambe என்ற இடத்தில் இருந்து சட்டவிரோதமாக 130 பயணிகளை ஏற்றிக் கொண்டு சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென அந்த கப்பல் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்த நிலையில், நீரில் மூழ்கி மாயமான 68 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக்குழு 45 பேரை தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்டது. கப்பலின் மேற்பரப்பில் ஓட்டை ஏற்பட்டு அது கடலில் மூழ்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments