உதகையில் உறைபனி தாக்கம் அதிகரிப்பு!

0 4451

நீலகிரி மாவட்டம் உதகையில் உறைபனி தாக்கம் அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனி காலம் என்ற சூழலில் கடந்த வாரம் முழுவதும் நீர் பனியின் தாக்கம் காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உறைபனி தாக்கம் அதிகரித்து உதகை நகரில் காந்தல், தலைகுந்தா, ரேஸ்கோர்ஸ் மைதானம் பகுதிகளில் விளை நிலங்கள், வாகனங்கள், புல்வெளிகளில் உறை பனி படர்ந்துள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையோரங்களில் தீ கனப்பு மூட்டி மக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments