"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பிலிப்பைன்சை உலுக்கிய ராய் புயல் - பலி எண்ணிக்கை 375ஆக உயர்வு.!
பிலிப்பைன்சை கடந்த வாரம் தாக்கிய ராய் புயல் மற்றும் அதனை தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375ஐ தாண்டியது.
சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழையால் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் சீட்டுக் கட்டு போல் இடிந்து விழுந்து சேதமாகின. மீட்பு பணியில் ராணுவம், கடற்படை, தன்னார்வலர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 4 லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறிய நிலையில், பலர் பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன 56 பேரை தொடர்ந்து தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல் காற்றில் சிக்கி மத்திய பிலிப்பைன்ஸ் நகரமான Bohol-ல் மட்டும் 94 பேர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Comments